பள்ளியில் பீர் குடித்த மாணவிகள் - வைரலாகும் வீடியோ காட்சிகள்!
பள்ளியில் மாணவிகள் பீர் குடித்த காட்சிகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மாணவிகள் செயல்
சத்தீஷ்கர், மஸ்தூரி என்ற பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று நடந்துள்ளது.
இதில், பங்கேற்ற மாணவிகள் சிலர் பள்ளியிலேயே பீர் குடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்தின் போது, ஆசிரியர்களும் உடனிருந்துள்ளனர் என கூறப்படுகிறது.
தீவிர நடவடிக்கை
தொடர்ந்து, மாவட்ட கல்வி அதிகாரியான டி.ஆர். சாகு விசாரணை நடத்தினார். , இந்த விவகாரம் பற்றி விசாரிக்க 3 நபர் கொண்ட கமிட்டி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து மாணவிகள் விசாரணை குழுவினரிடம் கூறுகையில், வீடியோ எடுத்தபோது கொண்டாட்டத்திற்காக பீர் பாட்டில்களை கைகளில் வைத்தபடி நாங்கள் உயர்த்தி காட்டினோம்.
உண்மையில் நாங்கள் பீர் குடிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து பள்ளியின் முதல்வர் மற்றும் கல்வி மையத்தின் தலைவர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்புடைய மாணவிகளின் பெற்றோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என சாகு கூறியுள்ளார்.