பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் : வைரலாகும் புகைப்படம்

By Irumporai Oct 10, 2022 05:02 AM GMT
Report

சிதம்பரம் பேருந்து நிலைய நிழற்குடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு மாணவன் ஒருவன் தாலி கட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அத்துமீறும் மாணவர்கள்

சமீபகாலமாக அரசு பள்ளி மாணவர்களின் அத்துமீறல்கள் செய்யும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைப்பிடிப்பது, பேருந்துகளில் மது அருந்துவது, பொது இடங்களில் குத்தாட்டம் போடுவது போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் : வைரலாகும் புகைப்படம் | College Thali Class 12 Student In Chidambaram

இது ஒருபக்கம் என்றால், அறியாத வயதில் காதல் என சொல்லிக்கொண்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றுவது, சீருடையில் தாலி கட்டுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பேருந்து நிலையத்தில் திருமணம்

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தின் அருகே பல்வேறு ஊர் கிராமங்களுக்கு செல்வதற்காக மினி பேருந்துக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது.

அங்குள்ள நிழற்குடையில் பள்ளிக்கூட சீருடையில் பள்ளி மாணவிக்கு தனியார் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிற்றில் அந்த மாணவிக்கு தாலி கட்டியுள்ளார்.  

பஸ் ஸ்டாப்பில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் : வைரலாகும் புகைப்படம் | College Thali Class 12 Student In Chidambaram

அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை கிழித்து இருவர் மீதும் வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுது. இந்த வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.