தூக்கத்தில் நடந்து காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி; என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ!

Viral Video United States of America
By Sumathi Sep 25, 2024 01:15 PM GMT
Report

சிறுமி ஒருவர் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் காட்டுக்குள் நடந்து சென்று படுத்துள்ளார்.

சோம்னாம்புலிசம்

அமெரிக்கா, ஷ்ரெவ்போர்ட் பகுதியருகே பெற்றோருடன் வசித்து வரும் சிறுமி பெய்டன் செயின்டிக்னன்(10). இந்த சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளது.

தூக்கத்தில் நடந்து காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி; என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ! | Girl Went To Forest And Lying Down Viral Video

இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் சிறுமி வீட்டில் இருந்து வெளியேறி தூக்கத்திலேயே நடந்து, லூசியானா காட்டு பகுதிக்குள் சென்றுள்ளார். உடனே, பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்போ இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க!

சிறுமி மீட்பு

கிடைக்காததால், போலீஸில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீஸார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், டிரோன் இயக்குபவரான ஜோஷ் குளோபர் என்பவர் உதவியால் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். காட்டில் அலைந்து திரிந்து, தரையில் சுருண்டு படுத்து கிடந்த சிறுமியை அவளுடைய தோழியின் தந்தை மற்றும் பலர் சேர்ந்து மீட்டு, வெளியே கொண்டு வந்துள்ளனர்.

1.5 மைல் தொலைவுக்கு நடந்து சென்றுள்ளார். தற்போது, சிறுமியை காட்டில் இருந்து மீட்கும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது.