பார்வையற்ற பெற்றோர்; தகாத உறவில் நெருக்கம் - குழந்தை பெற்று தெருவில் வீசிய சிறுமி!
சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்து தெருவில் வீசியுள்ளார்.
சிறுமி கர்ப்பம்
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தெரு ஒன்றில் குழந்தை அழும் சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. அதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடனே சம்பவ இடம் விரைந்த போலீஸார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் நடத்திய விசாரணையில், அந்த குழந்தையை தெருவில் வீசி சென்ற தாய் அருகில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் 17 வயது சிறுமி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞருக்கு வலைவீச்சு
தொடர் விசாரணையில், அந்த சிறுமியின் பெற்றோர் கண்பார்வையில்லாத மாற்றுத்திறனாளிகள். மதுரையை சேர்ந்தவர்கள். அங்கு இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்ட 17 வயது சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அவரை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தபோது சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பின் குழந்தையை தெருவில் வீசியுள்ளனர்.
தற்போது, சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.