இது 3வது.. 16 வயது சிறுமி கர்ப்பம்; கதறும் தாய் - விசாரிக்கையில் வெளியான அதிர்ச்சி!
16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமாகியுள்ளார்.
சிறுமி கர்ப்பம்
சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு 16 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அவரிடம் இளைஞர் ஒருவர் ஆசை வார்த்தைக் கூறி நெருக்கமாக பழகியுள்ளார்.
இதில் அந்தச் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனை அறிந்த தாய் அதிர்ச்சியடைந்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில்,
அதிர்ச்சி தகவல்
சிறுமியிடம் நெருங்கி பழகிய நபர் நாகர்கோவிலை சேர்ந்த விஸ்வா என தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன்,
ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டார்.