17 வயது சிறுமி கர்ப்பம்.. பெற்றோர் இல்லாத நேரத்தில் வேலையை காட்டிய 60 வயது முதியவர் - அதிர்ச்சி!
வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட தாத்தா செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி கர்பம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயதான சிறுமி, இவர் 12ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவருகிறார். இவரின் பெற்றோர், கூலி வேலை செய்துவருகின்றனர், இவருக்கு சில நாட்களாக வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.
அதனால் இவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது இவரது பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் கர்பமாக உள்ளதாக கூறியுள்ளனர். அதன்பிறகு விசாரணை செய்த பொழுது அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.
தாத்தா செய்த காரியம்
இந்நிலையில், ஆரணி அடுத்த மங்களாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனியன் என்ற 60 வயது முதியவர், சிறுமிக்கு ‘தாத்தா’ முறை உறவினர். இவர் டிவி பார்ப்பதாக சொல்லி அடிக்கடி இவரது வீட்டிற்கு சென்றுள்ளார், அப்பொழுது அந்த சிறுமியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், சிறுமி கர்ப்பமடைந்ததாகவும், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக முதியவர் முனியன் பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டுவந்ததாகவும், விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அந்த சிறுமியின் பெற்றோர் ஆரணி அனைத்து மகளிர் போலீஸில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் முனியனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.