வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி...அத்துமீறிய நபர்

Tamil Nadu Police Kanyakumari
By Thahir Aug 20, 2022 04:56 AM GMT
Report

மன நலம் குன்றிய பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாணவியிடம் அத்துமீறிய நபர் 

 கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் கம்பளார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 17-வயதான மகள் மனநலம் குன்றிய நிலையில் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

கடந்த 13-ம் தேதி சனிக்கிழமை மாணவியின் தந்தை மற்றும் தாய் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மாணவி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்கு வந்த தந்தை வழி உறவினராக கொத்தனார் வேலை பார்க்கும் 41-வயதான ஜாண் செல்வன் என்பவர் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மாணவியை மிரட்டியும் அங்கிருந்து சென்றுள்ளார்.

வீட்டில் தனியாக இருந்த பள்ளி  மாணவி...அத்துமீறிய நபர் | A Schoolgirl Who Was Alone At Home The Trespasser

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம் நடந்தவற்றை தாயிடம் கூறிய நிலையில் சம்பவம் குறித்து தாயார் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார்,

மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து தலைமறைவாக இருந்த ஜாண் செல்வனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.