விமானத்தில் இளைஞர் செய்த செயல் - பெற்றோரிடம் கதறிய சிறுமி!
விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
லண்டனில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 289 பயணிகளுடன் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த சுப்பையா, பவானி என்கிற தம்பதி தனது 15 வயது மகளுடன் பயணம் செய்தனர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, மூவரும் வீட்டுக்கு சென்றனர். இந்நிலையில், அவர்களது மகள் யாரிடம் பேசாமலேயே இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் கேட்டுள்ளனர்.
இளைஞர் கைது
உடனே சிறுமி அழுது கொண்டே, விமானத்தில் பயணித்தபோது, தனது பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணி, தன்னிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டார். பயணிகளுக்கு மத்தியில் வெளியில் சொன்னால் அவமானம் ஏற்படும் என்பதால் சொல்லாமல் இருந்ததாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையில்,
சிறுமியின் இருக்கைக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்தது சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ஜாவாஸ் ஜார்ஜ் (31) என்பதும், அவர் அயர்லாந்து நாட்டில் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுவதும் தெரியவந்தது.
அதன்பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.