மறுத்த காதலன்; பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த காதலி - ஷாக் பின்னணி!
காதலனை, காதலி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ளார்.
காதலுக்கு மறுப்பு
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ஆகாஷ்(24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் கடலூர், புவனகிரியைச் சேர்ந்த சிந்துஜா(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்துள்ளார். தொடர்ந்து, பூம்புகார் கடற்கரை பகுதியில் ஆகாஷ், சிந்துஜா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
காதலி வெறிச்செயல்
பின், இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை வந்துள்ளனர். அந்த சமயத்தில் ஆகாஷ், சிந்துஜாவை காதலிக்க தொடர்ந்து மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிந்துஜா, காவிரி பாலக்கரை என்ற இடத்தில் வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார்.
மேலும், சிந்துஜாவும் அதற்கு மறுநாள் உயிரிழந்தார்.
பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.