காதல் கணவனை ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி!

Tamil nadu Attempted Murder
By Sumathi Jun 07, 2022 08:22 PM GMT
Report

ஓசூரில் குடும்ப தகராறில் காதல் கணவரை மனைவியே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து உள்ளார்.

நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி ஓசூர் சிப்காட் இ.எஸ்.ஐ மருத்துவமனை பின்புறம் வசித்து வருபவர் கார்த்திக் (வயது 29). கட்டுமான பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

காதல் கணவனை ஆத்திரத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி! | Wife Killed Husband In Form After 6 Years Marriage

இவரது மனைவி சந்தியா (27). இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

குடும்ப தகராறு 

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. இன்று அதிகாலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த சந்தியா, கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் சந்தியாவிற்கும் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் மனைவி சந்தியா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.