போதை பழக்கம்; காதலனுடன் மது குடித்த மாணவி திடீர் மரணம் - விசாரணையில் அதிர்ச்சி!
காதலனுடன் மது அருந்திய மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதை பழக்கம்
ஊட்டி, பாம்பே கேசில் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ்(20). இவரது தாய் தந்தை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பாட்டியுடன் வசித்து வருகிறார். தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் படிக்கிறார்.
இவர் பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ரிதி ஏஞ்சல் (19) என்பவரை காதலித்து வந்துள்ளார். கோவை தனியார் கல்லுாரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வரும் ரிதிக்கு வார விடுமுறை என்பதால், தன் வீட்டுக்கு மாணவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் அங்கு மது வாங்கி அருந்தியுள்ளனர்.
மாணவி பலி
தொடர்ந்து, பைன் பாரஸ்ட் என்ற பகுதிக்குச் சென்று மேஜிக் காளான் என்று அழைக்கப்படும் போதைக் காளானை ஆகாஷ் கொண்டுவர அதையும் இருவரும் உட்கொண்டுள்ளனர். இதனால் போதை தலைக்கேறிய நிலையில், இருவரும் தூங்கிவிட்டனர்.
அதன்பின், காலையில் எழுந்த ஆகாஷ், மாணவி எழாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து 108க்கு அழைத்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.