15 வயது சிறுமியை மது அருந்த வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை - காதலன் வெறிச்செயல்!
15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சிவகங்கை, காரைக்குடியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். கோவில் திருவிழா ஒன்றிற்கு சென்றபோது அந்த சிறுமியிடம் சூர்யா (19), நிஷாந்த் (20) என்ற இளைஞர்கள் அறிமுகமாகி இன்ஸ்டாவில் பேசி வந்துள்ளனர்.
அதில், சூர்யா என்பவரும் சிறுமியும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென கடைக்குச் செல்வதாக கூறிவிட்டுச்சென்ற சிறுமி 2 நாட்களாக மாயமாகியுள்ளார்.
காதலன் வெறிச்செயல்
பின் வீடு திரும்பிய அவர், காதலன் சூர்யா காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று மது அருந்த வைத்து நண்பர்கள் நால்வருடன் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீஸில் புகாரளித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சூர்யா, நிஷாந்த் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
மேலும், வினோத்குமார் (20), வேலு (20) உள்பட 3 இளைஞர்களும் பிடிபட்டுள்ளனர்.
விசாரணையில், சிறுமியை 34 மணி நேரம் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்து மேலும் 2 இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.