டிக் டாக்கில் வீடியோ பதிவிட்ட மகள்.. தந்தை செய்த கொடூர செயல் - பகீர் பின்னணி!
டிக் டாக்கில்' வீடியோ போட்ட மகளைத் தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிக் டாக்
‘டிக் டாக்’ எனப்படும், மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது.இந்த செயலியை பல்வேறு தரப்பினரும் இதைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி தனது குடும்பம் கடந்த 28 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளனர். இவரும் டிக் டாக் செயலி மூலம் வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.
மேலும் சிறுமியின் இந்த செயல் அவருடைய தந்தைக்குப் பிடிக்கவில்லை.5தொடர்ந்து டிக் டாக்கில் வீடியோ போடுவதை நிறுத்தும்படி பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் சிறுமி தந்தையின் பேச்சைக் கேட்காமல் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார்.
பாகிஸ்தான்
இந்த சூழலில் தனது சொந்த ஊரான பாகிஸ்தானுக்குச் சிறுமியின் குடும்பம் கடந்த 15ல் தேதி வந்தனர்.அப்போது, டிக் டாக்கில் வீடியோ எடுத்துப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த தந்தை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் உயிரிழந்தார். இது குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தந்தையும் அவரது மைத்துனரும் சேர்ந்து சிறுமியைக் கொலை செய்தது தெரியவந்தது.இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

வரலாற்றில் வெளிவராத கருணா ஒபரேசன்! விடுதலைப் புலிகள் பிளவுக்கு முன் கிடைத்த முக்கிய சமிக்ஞை IBC Tamil
