கள்ளக்காதலியுடன் ஆசை தீர உல்லாசம்.. அடுத்த நொடியில் காதலன் செய்த காரியம் - பகீர் பின்னணி!
கள்ளக்காதலியுடன் உல்லாசத்தை அனுபவித்துவிட்டு காதலன் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்து வரும் சங்கீதா (வயது 33) என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கணவரைப் பிரிந்து கூடுவாஞ்சேரியில் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பவுஞ்சூரில் ஜெயராஜ் (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும், தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜன.22 ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர்.
அப்போது உணவு வாங்க வெளியே சென்ற ஜெயராஜ், மீண்டும் அறைக்கு வந்தபோது, சங்கீதா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து மாமல்லபுரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொலை
உடனடியாக விரைந்து வந்த அவர்கள் சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே பிரேத பரிசோதனையின் அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால் சந்தேகம், அடைந்த காவல்துறையினர் ஜெயராஜ் பிடித்து விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று சங்கீதாவுக்கு வேறு சில நபர்களுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகம் ஜெயராஜ் அடைந்துள்ளார். இதனால் இருவரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சங்கீதாவைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஜெயராஜ், அவருடன் அறையெடுத்து உல்லாசமாக இருந்து, பின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஜெயராஜைக் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.