சூட்கேஸில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் - நடுங்க வைத்த பகீர் பின்னணி!
சூட்கேஸில் எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி
டெல்லியின் காஜிபூரில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பகுதியில் சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அதில் துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாகச் சென்ற மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சூட்கேஸை சோதனையிட்ட போது, அதில் எரிந்த நிலையில் பெண் உடல் ஒன்று இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஹூண்டாய் வெர்னா கார் ஒன்று அந்த பகுதியில் வந்து சென்றது தெரியவந்தது.அந்த கார் என்னைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த கார் அமித் திவாரி என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.
பெண் சடலம்
இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அமித் திவாரியின் உறவுக்கார பெண் 22 வயதான ஷில்பா பாண்டே என்பது தெரியவந்தது.அமித் திவாரியும் ஷில்பாவும் ஒரு ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் அடிக்கடி தனிமையிலிருந்துள்ளனர்.
இந்நிலையில் ஷில்பா தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அமித் திவாரியை வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமித்திவாரி சம்பவ தினத்தன்று குடிபோதையில் ஷில்பாவிடம் தகறாரில் ஈடுபட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
பிறகு ஷில்பாவின் உடலை அப்புறப்படுத்தத் தனது நண்பனான அனுஜை அழைத்துள்ளார்.அப்போது ஷில்பாவின் உடலை ஒரு சூட்கேஸில் வைத்து காரில் கொண்டு சென்று யாரும் இல்லாத இடத்தில் உடலை டீசல் ஊற்றி எரித்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தனர்.