தொண்டையில் சிக்கிய கேரட்..2 வயதுக் குழந்தை துடி துடித்து உயிரிழந்த கொடூரம் -நடந்தது என்ன?
தொண்டையில் கேரட் சிக்கி 2 வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 வயதுக் குழந்தை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர்கள் விக்னேஷ் -பிரமிளா தம்பதியினர். இவர்களுக்கு 2 வயதில் லித்திஷா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் தாய் பிரமிளா லித்திஷாவை அழைத்துக் கொண்டு அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த லித்திஷாவிடம் சமைக்காத கேரட் துண்டை சாப்பிட்ட கொடுத்ததாகக் கூறப்படுகிறது.அப்போது சமைக்காத கேரட்டை சாப்பிட்ட லித்திஷாவின் தொண்டையில் சிக்கியது. இதனால் மயங்கி விழுந்தாள்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த லித்திஷாவின் தாயார் மற்றும் அவரது உறவினர்கள் கதறியடித்துக்கொண்டு வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் குழந்தைக்கு அழைத்துச் சென்றனர்.அங்குக் குழந்தை லித்திஷாவிற்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
உயிரிழந்த சம்பவம்
பின் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பரிந்துரைத்தார்கள். இதனையடுத்து ,குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குப் பெற்றோர் சென்றனர். அப்போது குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள்,ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.
இதனைக்கேட்டதும் பெற்றோர்கள் கதறி அழுதனர்.கேரட் துண்டு தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.