மீண்டும் தலையோங்கிய தல - தளபதி ரசிகர்கள் மோதல் - 'கில்லி' பட பேனர் கிழிப்பு!
தளபதி விஜயின் 'கில்லி' பட பேனரை தல அஜித் ரசிகர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தல - தளபதி
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் குமாருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இதனால் வெகு நாட்களாவே தல தளபதி ரசிகர்கள் இடையிலான மோதல் குறைந்தபாடு இல்லை. இதற்கிடையில், கடந்த சில காலமாக 'ரீ ரிலீஸ்' கலாச்சாரம் உருவெடுத்துள்ளது.
அந்த வகையில், தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியான 'கில்லி', சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதைய தலைமுறையினரிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
பேனர் கிழிப்பு
வழக்கமாக விஜய், அஜித் படங்கள் வெளியானால் அவர்களது ரசிகர்கள் செய்யும் ஆராஜகத்துக்கு முற்றுப்புள்ளியே இல்லை. இந்த நிலையில் மே 1 உழைப்பாளர்கள் தினம் மற்றும் அஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடித்த 'தீனா' திரைப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இதன் காரணமாக காசி திரையரங்கில் கூட்டம் குவிந்தது.
அதுமட்டுமல்லாமல் படம் காண வந்த ஒரு ரசிகர், திரையரங்கம் முன்பு இருந்த கில்லி' பட பேனரை கிழித்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு பழி வாங்கும் விதமாக விஜய் ரசிகர் களமிறங்கி மீண்டும் ரசிகர்கள் மோதல் கலாச்சாரம் பரவி விடக்கூடுமோ என்று அஞ்சப்படுகிறது .