Monday, May 19, 2025

தீனா ரீ- ரிலீஸ்!! திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்து அட்டூழியம் செய்த ரசிகர்கள்

Ajith Kumar Birthday A.R. Murugadoss
By Karthick a year ago
Report

நடிகர் அஜித் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அஜித்

தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமாக திகழும் அஜித், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு அவரது பிறந்தநாளை கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். நீண்ட காலமாக, தள்ளிப்போன படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.

dheena re release fans crackers inside theatre

வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பின் விபத்து காட்சி ஒன்று வெளியாகி பெரும் வைரலானது. நடிகர் அஜித் ஓட்டும் கார், பாலன்ஸ் இல்லாமல் இடறி விழுந்த அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நடிகை வேண்டாம் - கணவரை இழந்த அந்த நடிகை தான் வேண்டும் - உறுதியாக இருக்கும் அஜித்

இந்த நடிகை வேண்டாம் - கணவரை இழந்த அந்த நடிகை தான் வேண்டும் - உறுதியாக இருக்கும் அஜித்

படத்தில் நாயகியாக திரிஷா நடித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருகின்றார்.

அட்டூழியம்

இந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும், தேதி இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியானது.

dheena re release fans crackers inside theatre

இந்நிலையில், இன்று அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் அநேக திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது சென்னையின் ஒரு திரையரங்கில் அளவிற்கு மீறி சென்று, திரையரங்கிற்குள்ளேயே பட்டாசு வெடித்து குத்தாட்டம் போட்டுள்ளார்கள் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.