இந்த நடிகை வேண்டாம் - கணவரை இழந்த அந்த நடிகை தான் வேண்டும் - உறுதியாக இருக்கும் அஜித்

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகர் அஜித்தின் அடுத்த படமான GoodBadUgly மீது பெரும் எதிர்பார்ப்பு தற்போதே ஏற்பட்டுள்ளது.
அஜித்
தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரமாக திகழும் அஜித், விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். நீண்ட காலமாக, தள்ளிப்போன படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். வெளிநாடுகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பின் விபத்து காட்சி ஒன்று வெளியாகி பெரும் வைரலானது.
நடிகர் அஜித் ஓட்டும் கார், பாலன்ஸ் இல்லாமல் இடறி விழுந்த அண்மையில் வெளியிடப்பட்டது. படத்தில் நாயகியாக திரிஷா நடித்து வரும் நிலையில், அனிருத் இசையமைத்து வருகின்றார்.
இந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும், தேதி இன்னும் தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பும் வெளியானது.
மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திர் இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித்துடன் "நேர்கொண்ட பார்வை" படத்திலும் நடித்துள்ளார்.
2 நடிகைகள்
மார்க் ஆண்டனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தற்போது இந்த கூட்டணி அமைந்துள்ளது. Good Bad Ugly என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு மே முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. படத்திற்கான நடிகர், நடிகைகள் கேஸ்டிங் தான் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் முதலில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க தெலுங்கு படங்களில் அசத்தி வரும் நடிகை ஸ்ரீலிலா(22) நடிப்பார் என தகவல் வெளிவந்துள்ளது.
தற்போது இப்படத்தில் கூடுதல் நாயகிகளாக நடிகை மீனா மற்றும் நடிகை சிம்ரன் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், நடிகர் அஜித்துடன் 90-களில் ஜோடியாக நடித்த மீனா சிம்ரன் ஆகியோர் மீண்டும் அவருடன் நடிக்கிறார்கள் என்ற செய்தி வைரலாகி வருகின்றது. வரும் 1-ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.