25 வயசுல பொண்ணு இருக்கு - இப்போவா?? 53 வயதில் கர்ப்பமான நடிகை ரேகா
நடிகை ரேகா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரேகா
80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வரிசையாக ஹிட் ஹிட் படம் கொடுத்தவர் ரேகா. "ஜெனிபர் டீச்சர்" என்றால் இன்றும் பிரபலம். சத்யராஜ் நாயகனாக 1986-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய "கடலோரக் கவிதைகள்" படத்தில் அறிமுகமானார் ரேகா.
முதல் படமே அவருக்கு பெரும் பிரபலத்தையும், வெற்றியையும் கொடுத்தது. அதனை தொடர்ந்து அதே ஆண்டில் அடுத்த மெகா ஹிட் படமாக வெளியானது "புன்னகை மன்னன்". பின்னர் எங்க ஊரு பாட்டுக்காரன், என் பொம்முக்குட்டி அம்முவிற்கு, புரியாத புதிர், என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் வரிசையாக ஹிட் படங்களில் நடித்தார்.
கடந்த 1996-ஆம் ஆண்டு ஹாரிஸ் என்பவரை திருமண செய்து கொண்ட ரேகா, அதன் பிறகு 6 ஆண்டுகள் படங்களில் நடிக்கவில்லை. 2002-ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் படத்தில் நாயகி பூமிகாவிற்கு தாயாக நடித்து மீண்டும் படங்களில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
கர்ப்பம்
தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்த வரும் அவர், கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. ரேகாவின் தற்போதைய வயது 53. இந்த வயதில் கர்ப்பமானாரா..? என்ற கேள்விகள் சமூகவலைத்தளங்களில் ரசிகர்களால் பெருமளவில் எழுப்பப்பட்டது.
ஆனால் உண்மையில் அவர் கர்ப்பமாகவில்லை. படத்தில் அவ்வாறு நடிக்கின்றார். புதுமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்க இருக்கும் மிரி அம்மா என்ற படத்தில் தான் அவ்வாறு நடித்துள்ளார் ரேகா.
இந்த படத்தில் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத் போன்ற பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். படம் கடந்த ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.