படத்துலே இருக்கு!! Semi'ல தோத்துட்டு அது எப்படி Finals?? 20 ஆண்டு சந்தேகம் - தீர்த்த இயக்குனர் தரணி
நடிகர் விஜய்யின் "கில்லி" படம் ரீ-ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கில்லி
தளபதி விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படம் என்றால் அது கில்லி தான். காதல் நாயகனாக இருந்த விஜய், ஆக்ஷன் நாயகனாக மாறிய காலகட்டத்தின் துவக்கத்தில் வெளியான இப்படம் அவருக்கு பெரும் மாற்றத்தை கொடுத்தது.
தரணி இயக்கத்தில், தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான "ஒக்கடு" படத்தின் ரீமேக்கான இப்படம் உண்மையில் ஒரிஜினல் படத்தையே மிஞ்சியது எனலாம்.
விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி என பலர் நடித்திருந்த இப்படம் 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. அப்போதே படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து, மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. விஜய்யின் கேரியரை மாற்றிய அப்படம், தற்போது 20 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ளது.
அப்போது சிறுவர்களாக படம் பார்த்த பலரும், தற்போது வளர்ந்து இளம் வயதில் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ரீ-ரிலீஸ் ஆகியுள்ள இப்படம், சுமார் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் பெரும் வசூலை குவித்த படமாக இப்படம் அமைந்துள்ளது.
படத்தின் வெற்றி காரணமாக, மீண்டும் கவனிக்கப்பட்ட இயக்குனராக மாறியுள்ளார் தரணி. தில், தூள், கில்லி என வரிசையாக தமிழ் சினிமாவில் கவனிக்க வைத்த படங்களை இயக்கியுள்ள தரணி, இறுதியாக 2011-ஆம் ஆண்டில் சிம்புவுடன் ஒஸ்தி படத்தை இயக்கியிருந்தார். தற்போது பேட்டி அளித்துள்ள அவர், கில்லி படத்தில் 20 ஆண்டுகளாக இருந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
படத்தில் செமி ஃபைனலில் தோற்கும் விஜய்யின் கபடி அணி எப்படி இறுதியில் விளையாடியது என பலரும் 20 ஆண்டுகளாகவே பேசி வந்தனர்.
அதற்கு விளக்கமளித்துள்ள தரணி, அது Best of 3 என கூறி, விஜய்யின் தங்கையாக வரும் நடிகை தனது அப்பாவிடம் விஜய் செமி பைனலில் வாங்கிய கோப்பையை காண்பிப்பது போன்ற காட்சி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.