திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் - வேட்பாளர் வாக்குறுதி
திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன் என வேட்பாளர் ஒருவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
இளைஞர்களுக்கு திருமணம்
மகாராஷ்டிரா, சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 20-ந்தேதி நடக்கவுள்ளது. அங்கு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் என்.சி.பி.(எஸ்.பி.) வேட்பாளர் ராஜாசாகேப் தேஷ்முக் அளித்த தேர்தல் வாக்குறுதி ஒன்று கவனம் பெற்றுள்ளது. சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்,
வேட்பாளர் வாக்குறுதி
"நான் வெற்றி பெற்றால் எனது தொகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவேன். மணப்பெண் தேடும் இளைஞர்களிடம் வேலை அல்லது தொழில் இருக்கிறதா? என்று கேள்வி கேட்கிறார்கள்.

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனஞ்செய் முண்டே, இந்த தொகுதிக்கு எந்த தொழில் நிறுவனங்களையும் கொண்டு வரவில்லை. அதனால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல், திருமணமும் செய்ய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக இருந்தாலும் இதுதான்... சங்கீதாவின் வளர்ப்புக்கு Royal salute! படுவைரலாகும் வீடியோ Manithan