திருமணம் ஆகாத பெண்கள் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் - அரசு அதிரடி அறிவிப்பு

China Marriage
By Thahir May 01, 2023 10:24 AM GMT
Report

சீனாவில் திருமணம் ஆகாத பெண்கள் இனி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் 2வது இடம் 

அண்மையில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது.

இந்த நிலையில் சீனா அரசு குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளையும், சில சலுகைகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில், மகப்பேறு விடுப்புக்காண ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டன.

சீனா அரசு அதிரடி நடவடிக்கை 

இளைஞர்கள் காதலிக்க ஏதுவாக கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சீனர்கள் அந்நாட்டில் குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குவதாக கூறப்படுகிறது.

Unmarried women can have children in China

இதனிடையே திருமணமாகாத பெண்கள், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை எடுத்துக்கொண்டு செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.