உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது இந்தியா..!

China India
By Thahir Apr 19, 2023 08:32 AM GMT
Report

உலக மக்கள்தொகை அறிக்கை படி மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

சீனாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா 

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA), ‘8 பில்லியன் உயிர்கள், எல்லையற்ற சாத்தியக்கூறுகள் உரிமைகள் மற்றும் தேர்வுகளுக்கான வழக்கு’ என்ற தலைப்பில் 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள்தொகை அறிக்கையை இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. அதில், உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.

India has overtaken China in terms of population

தகவலின் படி, இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனாகவும் (1,428 கோடி), சீனாவின் மக்கள் தொகை 1,425.7 மில்லியனாகவும் (1,428 கோடி) உள்ளது. இது 2.9 மில்லியன் (2.9 கோடி) வித்தியாசத்தில் உள்ளது.

சீனாவை முந்தியது இதுவே முதல் முறை

1950 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிதியம் மக்கள்தொகை தரவுகளை சேகரித்து வெளியிடத் தொடங்கிய பிறகு இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை முந்தியது இதுவே முதல் முறை.

 ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கைபடி, இந்தியாவின் மக்கள்தொகையில் 25 சதவீதம் பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்கள், 18 சதவீதம் பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்கள், 26 சதவீதம் பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்கள், 68% பேர் 15-64 மற்றும் 7% 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் சீனாவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட 200 மில்லியன் (20 கோடி) பேர் உள்ளதாவும் கூறப்படுகிறது.