பொண்ணு கிடைக்கவில்லை - விரக்தியில் 200 கி.மீ பாதயாத்திரை செல்லும் 90ஸ் கிட்ஸ்!
30 வயதை கடந்த திருமணமாகாத இளைஞர்கள் பாதயாத்திரை செல்லவுள்ளனர்.
90ஸ் கிட்ஸ்
கர்நாடகா, மாண்டியா பகுதி வேளாண் தொழில்கள் நிறைந்த இடமாகும். அங்கு பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆண்களை ஒப்பிடும் போது இளம் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால்,
30 வயதை தாண்டியும் பலருக்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனால், திருமணமாகாத இந்த ஆண்களுக்கு ஊக்கம் தரும் விதமாக பிரம்மச்சாரிகளின் பாதயாத்திரை என்ற பெயரில் நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
பாதயாத்திரை
பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை சுமார் 105 கி.மீ தூரம் எம்.எம் ஹில்ஸ் சாமுண்டீஸ்வரி கோயிலில் நிறைவடைகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதுமே சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.
இன்னும் 100 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. எனவே, பெங்களூரு, மைசூரு, மாண்டியா, சிவமோகா ஆகிய மாவட்டங்களில் உள்ள பல இளைஞர்கள் இந்த பாதயாத்திரையில் பங்கேற்க ஆர்வம் காட்டுகின்றனர்.