அதென்ன டிஜிட்டல் காண்டம்? எப்படி வேலை செய்யும் - நிறுவனம் சொல்றதை பாருங்க
புதிய செயலி ஒன்றை நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
டிஜிட்டல் காண்டம்
ஜெர்மனியை சேர்ந்த பில்லி பாய் என்ற ஹெல்த் நிறுவனம் காம்டம் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை டிஜிட்டல் காண்டம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த செயலி ஸ்மார்ட்போன்களில் சட்ட விரோத ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் ஆகாமால் தடுத்து விடும். புளுடூத் டெக்னாலஜியை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்களின் கேமரா மற்றும் மைக்ரோபோன்களை செயல் இழக்க வைத்து விடும்.
மேலும், ரெக்கார்டிங்க் செய்ய ஏதேனும் முயற்சிகள் நடைபெற்றால் கூடுதல் பாதுகாப்பு லேயர் போல செயல்பட்டு தடுத்து விடும். ஏற்கனவே 30 நாடுகளில் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. விரைவில் ஆப்பிள் போன்களிலும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
என்ன செய்யும்?
இந்த செயலியின் டெவலப்பர் ஆன பெலிஃப்அல்மீடியா கூறுகையில், "தற்போது ஸ்மார்ட் போன்கள் என்பது நமது உடலின் ஒரு பாகம் போலவே மாறிவிட்டது. ஸ்மார்ட் போன்களில் ஏகப்பட்ட முக்கிய தகவல்களை வைத்து இருக்கிறோம்.
எனவே உங்களையும், உங்களுக்கு தெரியாமல் நடக்கும் பதிவுகளையும் பாதுகாக்கும் விதமாக ஒரு செயலியை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இந்த செயலி, புளூடூத் வழியாக கேமரா மற்றும் மைக்குகளை பிளாக் செய்துவிடும்" எனத் தெரிவித்துள்ளார்.