வீரர், வீராங்கனைகளுக்கு 2 லட்சம் காண்டம்கள் - இலவசமாக வழங்கிய ஒலிம்பிக் கமிட்டி!
ஒலிம்பிக் கமிட்டி விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக காண்டம் வழங்கியுள்ளது.
காண்டம்கள்
பிரான்ஸின் தலைநகரமான பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 160 -க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பல நாடுகளிலிருந்து வரும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் நடைபெறும் நாட்களில் பாலியல் உறவில் ஈடுபடுவதுண்டு. இதனால் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பினை கருதி ஒலிம்பிக் கமிட்டி பல வருடங்களாக இலவசமாக காண்டம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர் வீராங்கனைகள் பாலியல் உறவில் ஈடுபடக்கூடாது என்பதற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
ஒலிம்பிக் கமிட்டி
அந்த சமயத்தில் வீரர்களுக்கு காண்டம் வழங்குவதை ஒலிம்பிக் கமிட்டி நிறுத்தி வைத்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் இல்லை என்பதால் வீரர் வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் வீரர், வீராங்கனைகளுக்கு 2,30,000 காண்டம்களை ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. அதில் 2 லட்சம் ஆணுறைகளும், 20 ஆயிரம் பெண்ணுறைகளும் 10 ஆயிரம் ஓரல் காண்டம்களும் அடங்கும்.
இது குறித்து ஒலிம்பிக் கமிட்டி, வீரர்கள் வீராங்கனைகளுக்கு எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு சென்று மற்றவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தான் காண்டம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.