காண்டம் வாங்கி வர மறுத்த சிறுவனை கத்தியால் குத்திய கொடூரம்!!
மகாராஷ்டிராவில் கருத்தடை வாங்கிவர மறுத்த சிறுவனை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள காரடி பகுதியில்,நிலேஷ் வாக்மரே என்ற வாலிபர் வேலையில்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கடந்த 3-ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை அழைத்து நள்ளிரவில் கருத்தடை வாங்கி வர கூறியுள்ளார்.
இந்நேரம் எங்கு சென்று வாங்குவேன் என சிறுவன் கேட்க அதோ அந்த மெடிக்கல்லில் வாங்கி வா என கராராக கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுவன் காசை அவரிடமே திருப்பி கொடுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், சிறுவனை கத்தியால் பல இடங்களில் குத்தியுள்ளார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அவரது பெற்றோர்கள், வாக்மரே மீது போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வாக்மரேவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.