ரஷ்யாவில் காண்டம் விற்பனை 170% அதிகரிப்பு - காரணம் என்ன?

RussiaUkraineWar RussiaUkraineCrissis CondomSales SalesIncrease Condom காண்டம் காண்டம்விற்பனை
By Thahir Mar 21, 2022 08:33 PM GMT
Report

ரஷ்யாவில் காண்டம் விற்பனை சுமார் 170% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா தனது நிலைபாட்டில் இருந்து பின்வாங்கவில்லை.

உக்ரைன் - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் ரஷ்யாவில் காண்டம் விற்பனை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் வர்த்தகத்தை தடை செய்துள்ளது.

இந்த நிலையில் மக்கள் எதிர்காலத் தேவைக்காக அதிகளவிலான காண்டம்-களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

இதன் வாயிலாக மார்ச் மாதத்தின் முதல் 2 வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் Wildberries என்னும் ஆன்லைன் ரீடைல் தளத்தில் காண்டம் விற்பனை சுமார் 170 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் Reckitt நிறுவனத்தின் காண்டம் விற்பனை 36.6 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் சூப்பர்மார்கெட்-களில் அதிகப்படியான டிமாண்ட் காரணமாகக் காண்டம் விலை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் விற்பனையில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.