ரிசார்ட்டில் மர்மமாக இறந்து கிடந்த 12 இந்தியர்கள் - என்ன நடந்தது?
சொகுசு விடுதியில், 12 இந்தியர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வாயு கசிவு
ஜார்ஜியா, குடவுரி என்ற இடத்தில் சொகுசு விடுதி ஒன்று உள்ளது. இங்கு, இந்திய உணவுகளை பரிமாறும் உணவகம் உள்ளது. இதில், 12 இந்தியர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.
விடுதியின் இரண்டாம் மாடியில் உள்ள அறையில் அனைவரும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், தங்கள் அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை.
12 இந்தியர்கள் மரணம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இவர்களின் படுக்கை அறைக்கு மிக அருகிலேயே ஜெனரேட்டர் ஒன்று இருந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு அது இயங்க தொடங்கியுள்ளது.
இதனால் ஏற்பட்ட வாயு லீக் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது, உயிரிழந்தவர்களின் உடல்களை
இந்தியா எடுத்துவர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், போதிய உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.