பெண்களை மட்டுமே குறிவைக்கும் மர்மக்காய்ச்சல்; 300 பேர் பாதிப்பு - நடுங்கும் உலக நாடுகள்
பெண்களை மட்டுமே மர்மக்காய்ச்சல் தாக்கி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்மக்காய்ச்சல்
உகாண்டா, புண்டிபுக்யோ மாவட்டத்தில்மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதுவரை இந்த மர்ம காய்ச்சலுக்கு சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றாலும் கூட எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில்,
உலக நாடுகள் அச்சம்
“ மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் ஒரு வார காலத்திற்குள் குணமடைந்து விடுகின்றனர். புண்டிபுக்யோ மாவட்டத்தை தவிர வேறு எங்கும் இந்த நோய் பரவவில்லை. இந்த நோய்க்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதே போல் இதற்கு முன்னர் 1518ல் பிரான்ஸ் நாட்டில் டேன்சிங் ப்ளேக் எனப்படும் மர்மநோய் பரவியதாகவும், அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கட்டுப்பாடின்றி
உயிரிழக்கும் அளவுக்கு தொடர்ந்து ஆடிக்கொண்டே இருந்ததாகவும் அப்போதைய வரலாற்று குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.