உலகிலேயே காஸ்ட்லி ஹோட்டல் இதுதான்; ஆனால் யாருமே அங்கு தங்கவில்லை - ஏன் தெரியுமா
உலகில் அதிக செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் குறித்து பார்க்கலாம்.
ரியுக்யோங் ஹோட்டல்
வட கொரியாவின் பியோங்யாங்கில் உள்ள 330 மீ (1,080 அடி) உயரம் கொண்ட, கட்டிடம் தான் ரியுக்யோங் ஹோட்டல். இது கட்டப்பட்ட நேரத்தில் உலகின் மிக உயரமான ஹோட்டலாக கருதப்பட்டுள்ளது. Ryugyong ஹோட்டல் 55 பில்லியன் வோன் (இந்திய மதிப்பில் ரூ.3,258,954,050) செலவழித்து கட்டப்பட்டது.
இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது இன்று வரை திறக்கப்படவில்லை. கட்டுமானம் மற்றும் பொருட்கள் கிடைப்பதில் தொடர்ச்சியான பிரச்சனை காரணமாக வேலைகள் முடிவடைவது தாமதமாகியுள்ளது.
கின்னஸ் சாதனை
105 ஆளில்லாத அறைகளைக் கொண்டுள்ளது. இதனால் அதனை 'பேய் உலாவும் ஹோட்டல்' என்று கூறுகின்றனர். தொடர்ந்து 2012-ம் ஆண்டில், வட கொரிய அரசாங்கம் ரியுக்யோங் ஹோட்டலின் கட்டுமானத்தை விரைவில் முடிப்பதாக உறுதியளித்தது.
இருப்பினும் இந்த ஹோட்டல் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. கட்டுமானப் பணிகளில் ஏற்படும் தொடர்ச்சியான இடையூறுகள் மற்றும் சிக்கல்களால், இந்த திட்டம் இன்னும் முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.