வந்தா மட்டும் போதும்; ஊக்கத்தொகையே இவ்வளவா? அதுவும் அமெரிக்காவில் இப்படியா!
சொந்தமாக வீடு வாங்கி தங்கும் நபர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
அமெரிக்கா, கன்சாஸ் மாகாணத்தில் டோபேக்காவை தேர்ந்தெடு என்ற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்திட்டத்தின்படி, இங்கு சொந்தமாக வீடு வாங்கி குடி பெயரும் நபர்களுக்கு 15,000 டாலர்கள் ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது.
இந்த பகுதியில் குறிப்பிட்ட காலம் வாடகைக்கு வீடு எடுத்து தங்குபவர்களுக்கு 10,000 டாலரும் ஊக்கத்தொகையாக கிடைக்கும். இங்கே குடியிருந்து ரிமோட் முறையில் வேலை செய்பவர்களுக்கு 10000 டாலர்கள் ஊக்கத் தொகை.
டோபேக்காவை தேர்ந்தெடு
தல்சா நகருக்கு வரக்கூடியவர்கள் கடந்த ஓராண்டு காலம் வேறு நகரங்களில் தங்கி விட்டு புதிதாக தல்சா நகரத்திற்கு வந்து புதிதாக வீடு வாங்கி தங்க வேண்டும். அந்த வகையில் இதுவரை சுமார் 3,000 பேர் இந்த திட்டத்தின் கீழ் தல்சா நகரத்திற்கு குடிபெயர்ந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து கொலம்பஸ், ஜார்ஜியா ஆகிய பகுதிகளிலும் ஜார்ஜியாவில் குடியேறுங்கள், கொலம்பஸ் குடியேறுங்கள் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த பகுதியில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.