முடிகளை வெட்டி கொண்ட சிறுமிகள் - பின்னணியில் அதிர்ச்சி காரணம்!
சீப்பு இல்லாமல் சிறுமிகள் முடி வெட்டிக்கொண்ட சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
கடும் நெருக்கடி
ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பானது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
போரில் இதுவரை 39,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். போர் தொடங்கி 300 நாட்களுக்கும் மேல் ஆகியும் போர் முடிவுக்கு வந்த பாடில்லை.
தொடரும் அவலம்
ஏறத்தாழ காசா பகுதி தரைமட்டமாகிவிட்டது. அவர்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதும் கடும் சிக்கலாகியுள்ளது. இந்நிலையில், குழந்தைகளுக்கான நோய்களை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர் லோப்னா அல்-அஜைஜா என்பவரிடம் சிறுமிகள் பலரும், எங்களுக்கு தலைமுடியை ஒழுங்குப்படுத்த சீப்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதற்கு அவர் முடிகளை வெட்டி கொள்ளுங்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து, சிறுமிகள் முடிகளை வெட்டி கொண்டுள்ளனர். சீப்பு மட்டுமன்றி தலைக்கு தேய்க்கும் ஷாம்பு, சோப்பு, வீட்டை தூய்மைப்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவை எதுவும் கிடைப்பதில்லை.
தூய்மை பற்றாக்குறை ஏற்பட்டு தொற்று நோய்கள் அதிகரித்து வருகிறது. ரபா எல்லையின் கட்டுப்பாட்டை இஸ்ரேல் கைப்பற்றியதால், சர்வதேச நாடுகளின் உதவிகள் குறைந்த நிலையில் பாலஸ்தீனியர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.