சிறுமி உடலுக்கு போராடிய 2 குடும்பம் - காட்டி கொடுத்த Nail Polish

Kerala
By Karthikraja Aug 05, 2024 12:38 PM GMT
Report

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்ட உடலை இரண்டு குடும்பத்தினர் உரிமை கோரினர்.

வயநாடு நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாட்டில் கன மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலச்சரிவில் 300க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன 200 க்கும் மேற்பட்டோர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். 

wayanad landslide image

அடையாளம் காண முடியாத உடல்களுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்து, அடக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நிலச்சரிவில் பாறைகள் உருண்டோடியதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளது. உடுத்தியிருக்கும் உடை, உடலில் உள்ள மச்சம் போன்றவற்றை வைத்தே உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது.

சிறுமி உடல்

இந்நிலையில், பிரெஸ்நெவ் என்பவர் சூரல்மலையில் உள்ள தங்களது பண்ணை வீட்டில் காணாமல் போன தனது 14 வயது மகள் அனாமிகாவை காணாமல் கண்ணீருடன் காத்திருந்தார். இதனையடுத்து மலப்புரம் அருகே சாலியாற்றில் பாதி அழுகிய நிலையில் ஒரு சிறுமி உடல் கிடைத்துள்ளதாகவும் அதை அடையாளம் காட்டுமாறு பிரெஸ்நெவ்க்கு தகவல் வந்தது. 

wayanad landslide image

இந்நிலையில் அந்த உடலை பார்த்த பிரெஸ்நெவ் அது தனது மகள் தான் என கூறியுள்ளார். காரணம் கையில் இருந்த நீல நிற நெய்ல் பாலிஸ் தான். சம்பவத்தன்று சிறுமியின் கையில் நீல நிற நெய்ல் பாலிஸ் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நெய்ல் பாலிஸ்

ஆனால் அங்கே வந்த மற்றொரு குடும்பம் அந்த உடல் தங்களுடைய மகளின் உடல் என உரிமை கோரியுள்ளது. தங்கள் மகளுக்கு நெய்ல் பாலிஸ் வைக்கும் பழக்கமில்லை இருந்தாலும், ஆற்றில் உடல் ஊறியதால் நீல நிறமாக மாறியிருக்கும் என கூறினார்.

இதையடுத்து இரு தரப்பின் முன்னிலையில் சிறுமியின் நகத்தை கீறி பார்த்து அது உதிர்ந்ததும் நெயில் பாலிஸ் தான் என உறுதி படுத்தினர். இதனையடுத்து அது அனாமிகா தான் என உறுதி செய்யப்பட்டு பிரெஸ்நெவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின் மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.