525 கோடி மோசடி ..தேவநாதனுக்கு அண்ணாமலை வக்காலத்து வாங்குவதா.! காயத்ரி ரகுராம் கேள்வி

ADMK BJP K. Annamalai Gayathri Raghuram
By Vidhya Senthil Aug 14, 2024 09:00 AM GMT
Report

 மயிலாப்பூர் கூட்டமைப்பில் முதலீடு செய்திருந்த மக்கள் பணத்தை பாஜக 2024 தேர்தலுக்குப் யன்படுத்தியதாக அதிமுக மகளிர் அணியின் துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

தேவநாதன்  கைது

 சென்னை மயிலாப்பூரில் தேவநாதனுக்கு சொந்தமான தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட்’ என்ற நிதி நிறுவனம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு முதல் முதிர்வுத் தொகை மற்றும் வட்டிப் பணம் முறையாக வழங்கப்படவில்லை என கூறி அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை முதலீடு செய்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

525 கோடி மோசடி ..தேவநாதனுக்கு அண்ணாமலை வக்காலத்து வாங்குவதா.! காயத்ரி ரகுராம் கேள்வி | Gayathri Raghuram Condemns Annamalai

பின்னர் மயிலாப்பூர் காவல்துறையின் அறிவுரைப்படி பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் ரூ.50 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து திருச்சியில் வைத்து நிதி நிறுவனத் தலைவரும், தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதனை நேற்று  காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது : விடிய விடிய விசாரணை

சசிகலா உறவினர் பாஸ்கரன் திடீர் கைது : விடிய விடிய விசாரணை

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,'' மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

525 கோடி மோசடி ..தேவநாதனுக்கு அண்ணாமலை வக்காலத்து வாங்குவதா.! காயத்ரி ரகுராம் கேள்வி | Gayathri Raghuram Condemns Annamalai

அண்ணாமலை vs காயத்ரி ரகுராம்

இந்த நிலையில், மயிலாப்பூர் கூட்டமைப்பில் முதலீடு செய்திருந்த மக்கள் பணத்தை பாஜக 2024 தேர்தலுக்குப் பயன்படுத்தியதாக அதிமுக மகளிர் அணியின் துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'' கஷ்டப்பட்டுச் சம்பாதித்தவர்கள்/ஓய்வூதியப் பணம் பல ஆண்டுகளாக மயிலாப்பூர் கூட்டமைப்பில் முதலீடு செய்திருக்கிறார்கள். தேவநாதன் யாதவ வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது, அந்த கூட்டமைப்பு பணத்தை அவர் பாஜக 2024 தேர்தலுக்குப் பயன்படுத்தியதாகத் தகவல். பணத்தைத் திருப்பிக் கொடுக்க நிறைய நேரம் கொடுக்கப்பட்டது.  

 அப்பாவி மக்கள் ஏமாற்றப்பட்டு, இப்போது பணத்தைத் திருப்பித் தராதவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள். வெட்கக்கேடானது பண விஷயங்களில் நீங்கள் எப்போதாவது மக்களுக்காக உங்கள் அக்கறையை உயர்த்தியுள்ளார்களா? நீங்களும் பாஜகவும் எப்போதும் மக்களை ஏமாற்றுவதில் மறைமுகமாக ஈடுபட்டு வருகிறீர்கள்.

மோசடி செய்ததற்காக அவர் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும். அவர் குற்றவாளி இல்லை என்றால் சட்டம் அவரை விடுவிக்குமென்று தெரிவித்துள்ளார்.