கேப்டன்சியை இந்த வீரரிடம் கொடுத்துட்டு கிளம்புங்க ரோஹித் - கொந்தளித்த கவாஸ்கர்
கேப்டன் பதவியை பும்ரா வசம் அளித்துவிடுமாறு கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஆட்டம்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அல்லது முதல் இரண்டு போட்டிகளில் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்பட்டு வருகிறது.
அவர் இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து இருப்பதால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கவாஸ்கர் பேசுகையில், "கேப்டன் நிச்சயமாக விளையாட வேண்டும். அவர் காயத்தால் விளையாட முடியாமல் போனால் அது வேறு விஷயம்.
ஆனால், முதல் போட்டியில் கேப்டன் விளையாடவில்லை என்றால் அது அணியின் தற்காலிக கேப்டனுக்கு அதிக அழுத்தத்தை அளிக்கும். அது அத்தனை எளிது அல்ல. ரோஹித் சர்மா முதல் போட்டியில் விளையாட மாட்டார் என சில செய்திகளை நாம் பார்க்கிறோம்.
கவாஸ்கர் விளாசல்
அவர் இரண்டாவது போட்டியில் விளையாடுவாரா? என்பதும் உறுதியாகவில்லை. அது உண்மை என்றால் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ரோஹித்திடம் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். "நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களோ செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வெடுக்க வேண்டுமானாலும் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
அது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால், இந்த தொடரில் நீங்கள் ஒரு வீரராக மட்டுமே விளையாட முடியும். நீங்கள் எப்போது வேண்டுமோ அப்போது அணியில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள்.
ஆனால், இந்த தொடரில் துணை கேப்டனை நாங்கள் கேப்டனாக அறிவிக்கிறோம்." அஜித் அகர்கர் இவ்வாறு ரோஹித் சர்மாவிடம் சொல்ல வேண்டும்." என காட்டமாக தெரிவித்துள்ளார்.