தோனியின் இடத்தை பிடிக்கப்போகும் வீரர் இவர்தானா? நிர்வாகம் முடிவு - ரகசியத் தகவல்!
சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கட் கீப்பரை நிர்வாகம் தேர்ந்தெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கெட் கீப்பர்
அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வீரர்களை தேர்ந்தெடுக்கும் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு அணியும் அதற்கு முன்பு அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்களை பட்டியலை வெளியிட வேண்டும். அதன்படி தீபாவளி பண்டிகை அன்று மொத்தம் உள்ள 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட 46 வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
அதில் சென்னை அணியை பொருத்தவரை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மதீஷ பத்திரனா, எம்.எஸ் தோனி ஆகியோர் தக்கவைக்கப்பட்டனர். பல எதிர்பார்ப்பிற்கு பிறகு தோனி விளையாடுவது உறுதி செய்யப்பட்டது. அவரை அணிஅன்கேப்டு பிளேயராக தக்கவைத்துள்ளது என தெரியவந்தது.
ரகசியத் தகவல்
அதேசமயம் அடுத்த தொடரில் அவர் விளையாடுவாரா என்று ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் இப்போதே எழுந்துள்ளது. இந்த நிலையில், தோனிக்கு அடுத்தபடியாக சென்னை அணியில் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கவனிக்க நல்ல வீரரை சென்னை அணி நிர்வாகம் தேடி வருகிறது.
அனுபவம் வாய்ந்த வீரராகவும், கேப்டன் இல்லாதபோது அணியை வழிநடத்தக் கூடிய நபராகவும் இருக்க வேண்டும் என விரும்புவதாக தகவல் கூறப்படுகிறது. அதன்படி, தோனியின் இடத்திற்கு அடுத்ததாக தேர்வு செய்ய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ள வீரர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, எம்.எஸ் தோனிக்கு பின் சென்னை அணியின் பிரதான விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில்,
இருந்து ரிஷப் பன்ட் நீக்கப்பட்ட நிலையில், அவர் மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளார். எனவே ஏலத்தில் ரிஷப் பன்ட்டை எப்படியாவது எடுக்க சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.