எனக்கு அடுத்து இவர் தான் சென்னைக்கு விக்கெட் கீப்பர் பினிஷர் - அடையாளம் காட்டிய தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விரைவில் தனது ஓய்வை தோனி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி
சர்வதேச கிரிக்கெட்டை தாண்டி உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடரிலும் ஜாம்பவானாக உள்ளார் தோனி. தனிப்பட்ட ரெகார்ட் மட்டுமின்றி, சென்னை அணிக்கு சிறப்பான ஒரு கேப்டனாக விளங்குகிறார் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது வரை 5 முறை கோப்பையை வென்றும், பல முறை Play off சுற்று என சென்னை அணி இது வரை செய்திராத சாதனையே ஐபிஎல் தொடரில் இல்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள அவர் விரைவில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து யார்
இந்த சூழலில் தான் சென்னை அணிக்கு அடுத்து யார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் உள்ளது. அந்த இடத்திற்காக தான் இளம் வீரர் சமீர் ரிஸ்வி அணியில் தேர்வாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தொடரில் impact வீரராக இருக்கும் அவர், அடுத்து வருடம் முதல் அணியின் விக்கெட் கீப்பராகவும், பினிஷராகவும் இருப்பார் என நம்பப்படுகிறது. அவர் மீது தோனி அதீத நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அணிக்குள் அவருக்கு ஆதரவான நிலை இருக்கும் நிலையில், அவரே அடுத்த ஆண்டு Finisher - விக்கெட் கீப்பராக இருப்பார் என பேசப்படுகிறது.