இனியும் நான் தலையிடமாட்டேன் - முழுவதுமாக ஒதுங்கிய தோனி !! போட்டுடைத்த ருதுராஜ்
சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியது இன்னும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.
தோனி
சென்னை அணி இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பல சாதனைகளை செய்துள்ளது. 5 முறை கோப்பை, பல முறை இறுதி போட்டி, பல முறை Play off வாய்ப்பு என அனைத்தும் விதத்திலும் சாதனைகளை சென்னை அணி நிகழ்த்தியுள்ளது.
அதற்கு முக்கிய காரணம் அணியின் கேப்டன் தோனி என்றே கூறலாம். 2008-ஆம் ஆண்டு அணிக்கு கேப்டனான அவர், கடந்த ஆண்டு வரை தலைமை தாங்கினார்.கிரிக்கெட் உலகில் பெரும் மரியாதையை பெற்றுள்ள தோனி சர்வதேச விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.
அவர் விரைவில், உள்ளூர் போட்டியான ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அவர் தனது கேப்டன்ஷிப்பை இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்வசம் ஒப்படைத்து விட்டார்.
தலையீடு
சென்னை அணி இன்னும் Play off வாய்ப்பை உறுதிப்படுத்திடாத நிலையில், நேற்று சென்னையில் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்தது.
அதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ருதுராஜ், சென்ற ஆண்டு ஒவ்வொரு போட்டியிலும் கேப்டனாக இருந்திருந்தால் அணியில் என்ன மாற்றங்கள், பவுலர்களை எவ்வாறு மாற்றி இருப்பேன் என சிந்தித்துக் கொண்டு இருந்ததாக கூறி, தற்போது கேப்டனாக அணியின் கட்டுப்பாட்டை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
கேப்டனாகிய பின்னர் தோனியிடம் எந்த ஆலோசனையும் தான் கேட்கவில்லை என கூறி, தோனி தன்னிடம் "நீ என்ன செய்கிறாயோ அது சொந்த முடிவு. உனது பொறுப்பு. எந்த விஷயத்திலும் நான் தலையிட மாட்டேன் என உறுதிப்பட தெரிவித்ததாக கூறினார்.