Play Off வாய்ப்பு யாருக்கு - தோனி கனவை உடைக்கும் விராட் !! தலைவலியாக மாறிய பெங்களூரு?
சென்னை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது.
சென்னை வெற்றி
Play Off வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள சென்னை அணி நிச்சயமாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் நேற்று சென்னை சேப்பாக்க மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குப்புடிக்க முடியாமல், 20 ஓவர்களில் வெறும் 141/5 ரன்களே எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 47(35) ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில் மறுபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ் கடைசி வரை அவுட்டாகாமல் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். சென்னை அணி 18.2 ஓவர்களில் 145/5 எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது. சென்னை அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நிச்சயமாக சென்னை அணி Play Off சுற்றிற்கு தகுதி பெற்று விடும்.
துரத்தும் பெங்களூரு
ஆனால், அது சுலபமில்லை. சென்னை அணி எதிர்கொள்ள இருக்கும் அணி பெங்களூரு. முதல் 7 ஆட்டங்களில் 1'இல் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பெங்களூரு அணி, அடுத்த 6 ஆட்டங்களில் 5'இல் தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.
திடீரென முன்னேறிய பெங்களூரு அணி தற்போது புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கும் கடைசி போட்டி வெற்றி என்பது மிகவும் முக்கியமானதாகும். வெற்றி பெற்றால், பெங்களூருங் அணியும் சென்னை அணியை போலவே 7 போட்டிகளில் வெற்றி பெற்று விடும்.
பின்னர் Run - Rate அடிப்படையில் Play off வாய்ப்பு யாருக்கு என்பது முடிவாகும். வெளியேறிவிட்டது என்று நினைக்கப்பட்ட பெங்களூரு அணி தற்போது சென்னை அணிக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. சென்னை வெற்றி பெறுமா என்பதை வரும் 18-ஆம் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.