IPL வரலாற்றில் 3-வது வீரர் - வித்தியாசமாக அவுட்டான ஜடேஜா !! அது என்ன Obstructing the field?
நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் பேட்டிங்
வென்றாகவேண்டிய காட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணியை டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணி பௌலிங் செய்யவைத்தது. அதன் படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணி பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து பந்துவீசினர். ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரியான் பராக் 47(35) ரன்கள் எடுத்திருந்தார். ஜெய்ஸ்வால் 24, ஜுரேல் 28, ஜோஸ் பட்லர் 21 ரன்கள் எடுத்திருந்தனர்.
சென்னை அணியில் அபாரமாக பந்து வீசிய சிமர்ஜீத் சிங் 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
சென்னை வெற்றி
பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரச்சின் ரவீந்திரா 27(18), டேரில் மிட்செல் 22(13) சிவம் துபே 18(11) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ருதுராஜ் இதுவரை ஆட்டமிழக்காமல் 42(41) ரன்களை எடுத்தார். சென்னை அணி 18.2 145/5 எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு சென்னை அணி முன்னேறியுள்ளது.
ஜடேஜா அவுட்
இப்போட்டியில் விசித்திரமான முறையில் ஜடேஜா அவுட்டாகினார். 16வது ஓவரில் ஆவேஷ் கான் வீசிய 5-வது பந்தை தேர்ட் மேன் திசையில் அடித்த ஜடேஜா, 2வது ரன்னுக்காக ஓட முயற்சித்த போது, ருதுராஜ் வேண்டாமென கூற, அதனை கவனிக்காத ஜடேஜா பாதி தூரம் ஓடி வந்தார். அதற்குள் பந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கையில், வர திரும்பி ஓட முயன்றார் ஜடேஜா.
அவரை அவுட்டாக்கும் வகையில் சஞ்சு ஸ்டம்ப் நோக்கி பந்தை எரிய,ஓட முயன்ற ஜடேஜா குறுக்கே வந்தார். பந்து அவர் மீது பட ராஜஸ்தான் அணியினர் உடனே அம்பயரிடம் இதனை முறையிட்டனர். 3வது நடுவரிடம் அப்பீல் செய்யப்பட்டது.
ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுத்ததற்காக 3வது நடுவர் ஜடேஜாவிற்கு அவுட் கொடுத்தார். அதிருப்தியடைந்த ஜடேஜா ஆவேசமமாக பெவிலியின் திரும்பினார். ஃபீல்டிங் செய்யவிடாமல் இது போன்று ஐபிஎல் தொடரில் யூசுப் பதான் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் அவுட்டாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.