நிறைவேறாமல் போகுதா தோனியின் ஆசை? அடுத்தடுத்து இருக்கும் சிக்கல்கள்
தோனிக்கு சென்னையில் தனது கடைசி ஆட்டத்தை விளையாடவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது.
தோனி Retire
அதனை அவரே பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தோனி விளையாடுவது ரசிகர்களுக்கு போதும் என்ற அளவிற்கு இருக்கிறது. காயம் காரணமாக அவர் அவதிப்படுவது சில நாட்கள் முன்பு தான் வெளியானது.
அப்போது தெரிந்து விட்டது இது தான் தோனியின் கடைசி ஆட்டம் என்று. ஆனால், அவரின் ஆசைப்படி கடைசி ஆட்டம் சென்னையிலேயே நடைபெறுமா? என்றால் கேள்விக்குறி தான்.
கோப்பை வென்று அவருக்கு அளித்து வழியனுப்ப வேண்டும் என சென்னை அணி ரசிகர்கள் விரும்புகிறார்கள். வீரர்களும், அணி நிர்வாகமும் கூட அதேயே தான் விரும்பும். Eliminator மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் தான் நடைபெறுகின்றன. கோப்பையை வென்றால், சென்னனயில் அபாரமான Farewell.
நடக்குமா?
அப்படி இல்லையென்றால், Eliminator உள்ளது. அது சென்னையில் நடக்கும் திருப்தி இருக்கும். இது இரண்டுமே நடக்கவில்லை என்றால், ஒன்று அகமதாபாத்தில் அல்லது பெங்களூருவில் தோனி தனது இறுதி போட்டியை முடிப்பார்.
இது அவருக்கு மட்டுமின்றி சென்னை அணி ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றம் தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சென்னை அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6'இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.