அடுத்து சுற்றிற்கு முன்னேறுமா சென்னை?? உருவான புதிய சிக்கல்
சென்னை அணி அடுத்து சுற்றுக்கு முன்னேறுமா? என்ற கேள்வி ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.
சென்னை அணி
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி அதில் 6'இல் வெற்றி பெற்றுள்ளது. ரன் ரேட் +0.700. இதன் அடிப்படையில் தான் சென்னை அணி 3-வது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் SRH, DC, LSG ஆகிய அணிகளும் 6 வெற்றி பெற்றுள்ளன. ரன் ரேட் வேறுபாட்டால் தான் சென்னை அணி முந்துகிறது. ஆனால், அடுத்து சுற்று வாய்ப்பு இன்னும் சிக்கலாகவே இருக்கின்றது.
சிக்கல்
இன்று போட்டியில் நீடிக்கும் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் ஹைதராபாத்தில் மோத இருக்கின்றன. இதில், தோல்வியடையும் அணி பின்தங்கும். வெற்றி பெரும் அணி 3-வது இடத்திற்க்கும், சென்னை 4-வது இடத்திற்கும் வரும்.
ஆனால், இதில் ஒரு சிக்கல் தற்போது உருவாகியுள்ளது. ஹைதராபாத்தில் நேற்று நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலையும் மழை தொடர்ந்ததால், போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அப்படி போட்டி தடைபட்டால், ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கு தலா 1 புள்ளிகள் கிடைக்கும். இதன் காரணமாக, சென்னை அணி 5-வது இடத்திற்கு தள்ளப்படும். இதனால் சென்னை அணிக்கு இது பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
you May Like This Video