இதுக்கு தோனி விளையாடாமல் இருக்கலாம் - கடுப்பான ஹர்பஜன் சிங்!!
சென்னை அணி நேற்று 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி பெற்றது.
சென்னை வெற்றி
வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ரஹானே 9(7) ஆட்டமிழக்க, பின்னர் ஜோடிஸ் சேர்ந்த கேப்டன் ருதுராஜ் 32(21) மற்றும் டேரி மிட்சல் 30(19) ரன்களை எடுத்தனர்.
மீண்டும் கோல்டன் டக்காகி ஏமாற்றிய துபேக்கு அடுத்து வந்த ஜடேஜா 43(26) நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 167/9 ரன்களை குவித்தது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
பார்ஸ்டோ 7(6), ரூஸ்ஸோ0(3) என அடுத்தடுத்து அவுட்கினர்.20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.பேட்டிங்கில் 43(26) பௌலிங்கில் 4 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
தோனி விளையாடாமலே
தோனி இந்த போட்டியில் கோல்டன் டக்காகி ரசிகர்களை ஏமாற்றினார். அவர் 19 ஓவர்களில் 9-வது விக்கெட்டிற்கு களமிறங்கினார். அது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இது குறித்து கமென்டரி செய்யும் சென்னை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் தோனி மீது விமர்சனம் வைத்துள்ளார். அவர் பேசும் போது, 9-வது விக்கெட்டிற்கு தான் விளையாட போகிறார் என்றால் தோனி விளையாட வேண்டிய அவசியமே இல்லை. அவருக்கு பதிலாக ஒரு வேகப் பந்துவீச்சாளரை ஆடலாம்.
சென்னை அணியில் தோனி தான் முடிவெடுக்கிறார் என்ற ஹர்பஜன், இருப்பினும் அவர் அணியை அவசியம் ஏற்படும் போது பேட்டிங் இறங்க மறுக்கிறார் என சாடினார். தோனிக்கு முன் ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்கிறார் என்றும் அவரால் தோனியை போல அதிரடியாக ஆட முடியாது என கூறி, தோனி ஏன் இந்த தவறை செய்தார் என புரியவில்லை எனக் கூறினார்