சென்னை டீம்'குள்ளயும் நிறைய பிரச்சனை இருக்கு - முதல் முறை போட்டுடைத்த கேப்டன் ருதுராஜ்!!
நேற்று சென்னை அணி முக்கியமான போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.
சென்னை பேட்டிங்
வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி, முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ரஹானே 9(7) ஆட்டமிழக்க, பின்னர் ஜோடிஸ் சேர்ந்த கேப்டன் ருதுராஜ் 32(21) மற்றும் டேரி மிட்சல் 30(19) ரன்களை எடுத்தனர்.
மீண்டும் கோல்டன் டக்காகி ஏமாற்றிய துபேக்கு அடுத்து வந்த ஜடேஜா 43(26) நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 167/9 ரன்களை குவித்தது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. பார்ஸ்டோ 7(6), ரூஸ்ஸோ0(3) என அடுத்தடுத்து அவுட்கினர்.
சற்று தாக்கு பிடித்து ஆடிய பிராப்சிம்ரன் சிங் 30(23), ஷஷாங்க் சிங் 27(20) எடுத்து வெளியேற அதன் பிறகு பஞ்சாப் அணி தடுமாற துவங்கியது. சாம் கரண்7(11), ஜிதேஷ் சர்மா 0(1) , அஷ்டோயூஷ் சர்மா 3(10)ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற பஞ்சாப் அணியின் தோல்வி முடிவானது.
20 ஓவர்களில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அணி புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அணியில் பிரச்சனை
பேட்டிங்கில் 43(26) பௌலிங்கில் 4 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ், அணியில் சிலருக்கு காய்ச்சல் இருக்கும் காரணத்தால் அவர்கள் அவர்கள் அவதிப்படுகிறார்கள்.
காலையில் யார் அணியில் விளையாடப்போகிறார்கள் என்பது எங்களுக்குமே தெரியவில்லை. இருப்பினும், போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.