தோனி கேப்டன்ஷிப்'ல இது நடந்ததே இல்லை- CSK'வின் படுமோசமான சாதனை!!
சென்னை அணி நேற்று பஞ்சாப் அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது.
சென்னை அணி தோல்வி
சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, துவக்கம் முதலே பேட்டிங்கில் தடுமாறியது. ஓப்பனர்களான ரஹானே - ருதுராஜ் தடுமாறி ரன் எடுத்து வந்த நிலையில், ரஹானே 29(24) அவுட்டாக அடுத்த பந்தே அதிரடி ஆட்டக்காரர் துபே வெளியேறினார்.
அதனை தொடர்ந்து அடுத்தடுத்து தடுமாறிய சென்னை அணி, மிகவும் மெதுவாக ஆடியது. இறுதியில் சற்று சென்னை அணி அதிரடி கட்டியதன் காரணமாக 20 ஓவர்களில் 162 ரன்களை குவித்தது. அணியில் அதிகபட்சமாக ருதுராஜ் 62(48) எடுத்தார். பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, நேர்த்தியாக ஆரம்பம் முதலே வெளிப்படுத்தியது.
பிராப்சிம்ரன் 13(10) வெளியேறிய நிலையில், பேர்ஸ்டோ 46(30), ரூஸ்ஸோ 43(23) என நேர்த்தியாக விளையாட 17.5 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. தொடர்ந்து சென்னை அணி பஞ்சாப் அணியிடம் 5-வது முறையாக தோல்வியடைந்தது.
படுமோசமான சாதனை
சென்னை அணி புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 10 போட்டியில் 5-இல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி இனிவரும் 4 போட்டிகளிலும் வென்றதால் தான் Play off சுற்றிற்கு தகுதி பெரும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணி மற்றுமொரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அதாவது, நேற்றைய ஆட்டத்தில் 7வது முதல் 15வது ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட எடுக்காத அணியாக சென்னை அணி பட்டியலில் இணைந்துள்ளது.
இந்த பட்டியலில் மூன்று அணிகள் மட்டுமே இந்த மோசமான சாதனையை செய்துள்ளன. புனே வாரியர்ஸ் கொல்கத்தா எதிராக - 2012, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிராக - 2017, ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை இந்தியன்ஸ் எதிராக 2021.