ஆர்சிபி அணிக்கு மீண்டும் கேப்டனாகும் விராட் கோலி.. ரீடெய்னாகும் அந்த மூன்று வீரர்கள் யார்?
ஆர்சிபி அணி எந்த வீரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்சிபி அணி
வருகின்ற 2025ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அணியில் வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நிர்வாகிகள் வெளியிட உள்ளன.
அந்த பட்டியலில் அணி தரப்பில் 3 வீரர்களை மட்டும் தக்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை மெகா ஏலத்திற்கு முன்பு விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகிய மூவரும் தக்க வைக்கப்பட்டனர்.
இம்முறை ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களுக்கான ஊதியம் ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல ஐபிஎல் விதியின்படி, அன்-கேப்ட் வீரர்களை தக்க வைக்க ரூ.4 கோடி வரை ஊதியம் அளிக்க வேண்டும்.
ரீடெய்ன்
ஆகமொத்தம் 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்யலாம் அதன்படி, ஆர்சிபி அணியின் ரீடென்ஷன் எவ்வாறு இருக்கும் என எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கம் போல் அணியின் முதல் ரீடென்ஷனாக விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளது.
அதேபோல் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய இளம் வீரரான ரஜத் பட்டிதரையும் தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக இளம் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாளை அன்-கேப்ட் வீரராக ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்படவுள்ளார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ், வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு ஆர்டிஎம் கார்டினை பயன்படுத்த
அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும், மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ் உள்ளிட்டோரை ரிலீஸ் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.