உச்சம் தொட்ட பூண்டு, வெங்காயம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
வெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
காய்கறி விலை
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பூண்டு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரத்தில் 220 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூண்டு தற்போது 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சேலத்தில் பூண்டு வரத்து குறைந்ததால் கிலோவிற்கு ரூ.100 உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு கிலோ பூண்டு விலை 60 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
உயர்வு
வெங்காயம் விலையும் கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் பூண்டு விலையேற்றம் 500 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்படும்.
இந்த விலையேற்றம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.