பூண்டு, வெங்காயம் விலை சரமாரி உயர்வு; அடேங்கப்பா.. கிலோ இவ்வளவா?
பூண்டு மற்றும் வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
விலை உயர்வு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் காய்கறிகளின் வரத்து குறைந்து, அதன் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, சின்ன வெங்காயம் 50 ரூபாயிலிருந்து 65 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 35 ரூபாயிலிருந்து 45 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. பூண்டு 300 முதல் 450 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
நிலவரம் இதோ..
ஒரு கிலோ தக்காளி 20 ரூபாயிலிருந்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும் உருளைக்கிழங்கு 50 ரூபாயிலிருந்து அறுபது ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 55 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்கும், அறுபது ரூபாயில் இருந்த கேரட் தற்போது சற்று உயர்ந்து 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு குறித்து விளக்கமளித்துள்ள கூட்டுறவுத் துறை அதிகாரிகள், கூட்டுறவுத் துறையின் கீழ் பண்ணை பசுமை கடைகளில் ஏற்கனவே வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வரும் நாட்களில் வெங்காய வரத்து குறைந்து, விலை உச்சத்தை அடைந்தால் விற்பனை செய்யும் அளவை அதிகரிக்க திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.